அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்) -ன் தலைவர் மோகன் பகவத்தை `தேசப்பிதா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபகாலமாக முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்துவருகிறார். அதனடிப்படையில், டெல்லியிலுள்ள முக்கிய மதகுருவை நேற்று சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி செய்தியாளர்களிடம், “என் அழைப்பின் பேரில் மோகன் பகவத் இன்று வருகை தந்தார். அவர் ‘ராஷ்டிர-பிதா’ தேசத்தின் தந்தை. அவர் வருகையிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிப்படும். இந்தியாவில் இந்து, முஸ்லிம்களாகிய நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு வேறு. ஆனால், நாம் அனைவரும் ஒன்றுதான்” எனக் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *