தோல்வியிலிருந்து மீண்டெழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 4வது, ஓவல் டெஸ்ட்டிலும் மோசமாகத் தொடங்கியுள்ளது. ராகுல், ரோகித் சர்மா விரைவில் பெவிலியன் திரும்பினர். சற்று முன் புஜாராவும் வெளியேறினார்.

இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

ரோகித் சர்மா

ஒரே பார்முலாதான், அவுட் ஸ்விங்கராக வீசி ஒரு பந்தை மட்டும் மாற்றுமுறையாக இன்ஸ்விங்கர் வீசினால் அவுட், அல்லது தொடர் இன்ஸ்விங்கர்கள், ஒரு பந்து அவுட் ஸ்விங்கர் இப்படி வீசினாலும் அவுட். ஆகவே இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் ஒரே பார்முலாவைத்தான் கடைப்பிடிக்கின்றனர்.

இந்த முறை ஆண்டர்சனுக்கு சரியாக அமையவில்லை, முதல் ஸ்பெல்லில் 4 ஓவர்களில் 20 ரன்களை அவர் கொடுத்தார். கே.எல்.ராகுல் ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் 3 பவுண்டரிகள் அடித்தார். ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார், ஃபுல் பந்துகளை வெளியே செல்லும் போது ஆடாமல் விட்டுக்க் கொண்டிருந்தார் ரோகித் சர்மா.

27 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா கடைசியில் ஒரு ஆண்டுக்குப் பிறகு வந்து கையைச் சுற்றும் ஸ்விங் பவுலர் கிறிஸ் வோக்ஸ் ஷார்ட் ஆஃப் லெந்தில் ஒருபந்தைக் குத்தி சற்றே எழுப்பி வெளியே ஸ்விங் செய்தார், ரோகித் சர்மா அதைப் போய் இடித்தார் பந்து பேட்டின் தோள்பட்டைபோன்ற எட்ஜில் பட்டு பேர்ஸ்டோ கையில் போய் உட்கார்ந்தது, இந்தத் தொடரின் சிறந்த இந்திய பேட்ஸ்மென் ரோகித் நடையைக் கட்டினார்.

ராகுல் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் கால்களை நகர்த்துவதில் ஏகப்பட்ட சந்தேகங்களுடன் ஆடினார். ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு தடுமாறிய படியே தான் அவர் ஆடினார், கடைசியில் ராபின்சன் வீசிய ஒரு பந்து லேட் இன்ஸ்விங் ஆக பின் காலில் வாங்கினார், நடுவர் கையை உயர்த்தினார். ராகுல் ரிவியூ செய்தார் பயனில்லை கள தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியா 28/2.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புஜாரா ஒரு அருமையான பிளிக் பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து   கடைசியில் ஆண்டர்சனின் வழக்கமான அவுட் ஸ்விங்கருக்கு எட்ஜ் செய்து கேட்ச் ஆகி வெளியேறினார்.  விராட் கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஒரு அபாரமான நேர் பவுண்டரி அடித்து ஆடி வருகிறார். ரகானே இறங்கவில்லை ஜடேஜா இறங்கியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.