ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கிய குற்றச்சாட்டு; மறுக்கும் வட கொரியா!

வட கொரியா – ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறான தகவல் என வட கொரியா திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இதுவரை ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவில்லை எனவும், இனிமேல் ஏற்றுமதி செய்யும் எண்ணமும் இல்லை என விளக்கமளித்திருக்கிறது. ஆயுத ஏற்றுமதி குறித்த அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக வட கொரியா அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியா: தீவில் கரை ஒதுங்கிய அரிய வகை `பைலட்’ திமிங்கலங்கள்!

`பைலட்’ திமிங்கலங்கள்!

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா தீவின் கரையில் திடீரென 200-க்கும் மேற்பட்ட `பைலட்’ வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இந்த வகை திமிங்கலங்கள் மிகக் குறைவான அளவிலேயே இருப்பதால், இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. ஒரே வாரத்தில் இந்த வகை திமிங்கலங்கள் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கியிருக்கின்றன. முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட `பைலட்’ வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

லெபனானில் காலவரையின்றி மூடப்படும் வங்கிகள்… காரணம் என்ன?

லெபனான்

லெபனானில் அண்மைக்காலமாக வங்கிக் கொள்ளைகள் அதிகரித்திருப்பதால், அந்த நாட்டில் வங்கிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக வங்கிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக குறைவான அளவில் வங்கிகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மக்கள் வங்கிகளிலிருந்து தங்கள் சேமிப்பை withdraw செய்வதில் சட்டச் சட்டங்கள் இருப்பதால், துப்பாக்கிகளைக் கொண்டு மிரட்டி சேமிப்பிலிருந்து தொகையை எடுப்பதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன.

ஷின்சோ அபேவின் இரங்கல் கூட்டத்தில் 4,300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

ஷின்சோ அபே

தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இரங்கல் கூட்டம் இந்த மாதம் 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது. கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து 700 விருந்தினர்கள் உட்பட 4,300 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோவில் உள்ள நிப்பான் புடோகாண் என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.

உகாண்டாவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று!

வைரஸ் தொற்று!

உகாண்டா நாட்டில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. ஏழு பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு ஏற்பட்ட தொற்றுப்பரவலில் சூடான் திரிபு(sudan strain) கண்டறியப்பட்டது. இப்போது பரவி வருவது எபோலா சாய்ரி என்ற திரிபு(Zaire Strain). இந்த வகை திரிபு சூடான் திரிபைவிட வீரியம் குறைந்தது என்றாலும், இதற்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் தொற்றுப்பரவல் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.