பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ள கிரகம் நெப்டியூன். இந்த கிரகத்தை சுற்றி வளையம் போன்ற அமைப்பும் உள்ளது. இந்நிலையில், வான் ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் கிரகத்தையும் அதன் வளையத்தையும் புகைப்படம் எடுத்துள்ளது. இதனை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த 33 ஆண்டுகளில் நெப்டியூன் கிரகம் தொடர்பாக எடுக்கப்பட்ட துல்லியமான புகைப்படம் இதுவாகும்.
இது பூமியை விட சூரியனிலிருந்து 30 மடங்கு தொலைவில் அமைந்துள்ளது. மேலும், அதன் சுற்று பாதைகள் சூரிய மண்டலத்தில் இருந்து மிகவும் தொலைதூரத்தில் அமைத்துள்ளது. அந்த தூரத்தில், இருந்து சூரியன் மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் . அதனால் நெப்டியூனில் மதியம் நேரம் நீண்டதாக இருக்கும் .
Read More: ஒவ்வொரு 4 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்
Hey Neptune. Did you ring? 👋
Webb’s latest image is the clearest look at Neptune’s rings in 30+ years, and our first time seeing them in infrared light. Take in Webb’s ghostly, ethereal views of the planet and its dust bands, rings and moons: https://t.co/Jd09henF1F #IAC2022 pic.twitter.com/17QNXj23ow— NASA Webb Telescope (@NASAWebb) September 21, 2022
இந்த கிரகம் அதன் உட்புறத்தின் உள்ள அமிலம் காரணமாக ஒரு பனி ராட்சதமாக கருதப்படுகிறது. இது மட்டுமின்றி நெப்டியூனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தை விட கனமான தனிமங்களும் அதிகம் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.