ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள என்.டி.ஆர்., மருத்துவ பல்கலையின் பெயரை மாற்றும் மாநில அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது புதிய அரசியல் மோதலை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, விஜயவாடாவில் உள்ள டாக்டர் என்.டி.ஆர்., மருத்துவ அறிவியல் பல்கலையின் பெயரை, தன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி நினைவாக, டாக்டர் ஒய்.எஸ்.ஆர்., மருத்துவ அறிவியல் பல்கலை என மாற்ற, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முயற்சித்துள்ளார்.

மசோதா நகல் கிழிப்பு

இது தொடர்பாக, சட்டசபையில் நேற்று முன்தினம் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.சட்டசபையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன் கூடி, கடும் கோஷமிட்டு, மசோதா நகல்களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தெலுங்கு தேசத்தின், 17 எம்.எல்.ஏ.,க்கள் நாள் முழுதும், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:மிகவும் தீவிரமாக ஆலோசனை செய்த பின் தான், மருத்துவ பல்கலையின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் சுகாதார வசதிகள் உருவாவதற்கு, ஒய்.எஸ்.ஆர்., காரணமாக இருந்தார்.

அரசியல் மோதல்

அதனால் அவருடைய பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், என்.டி.ராமாராவை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.அரசின் இந்த முயற்சிக்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:கடந்த 1986ல், என்.டி.ராமாராவ் முதல்வராக இருந்தபோது இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான், அவருடைய மறைவுக்குப் பின், 1998ல் இந்த பல்கலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயரை மாற்றுவதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரம், ஆந்திராவில் புதிய அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

– நமது சிறப்பு நிருபர் –


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.