2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி, இந்த ஆண்டும் அணியில் இடம் பெற்றதை அடுத்து அவர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சற்று முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன் பதவியில் இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஜடேஜா கேப்டன் பதவியை ஏற்பார் என்றும் கூறப்பட்டிருப்பது தோனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 14 ஆண்டுகளாக ஒரே அணியில் கேப்டன் பதவியில் இருந்தவர் தோனி மட்டுமே என்ற சாதனை இருக்கும் நிலையில் இந்த ஆண்டு திடீரென அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் தோனி ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஒரு சிறந்த கேப்டனை உருவாக்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக ஜடேஜாவை கேப்டன் ஆக்கி இந்த தொடரில் அவருக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் அடுத்த ஆண்டு முதல் ஜடேஜா தனித்து கேப்டனாக செயல்படும் வகையில் அவருக்கு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தோனியின் முடிவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.