இப்பிரமாண்டமான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்திருக்கிறது. அப்படி 1950-களில் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தபோதே அதன் வெற்றி எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. ‘பொன்னியின் செல்வன்’ கதையின் உரிமையை வாங்கிய அவர், இயக்குநர் மகேந்திரனிடம் அதைத் திரைக்கதையாக மாற்றச்சொல்லியிருக்கிறார்.

மணிரத்னம்

மணிரத்னம்

ஆனால் ஒரு சில காரணங்களால் அது நிறைவேறாமலேயே போய்விட்டது. இதேபோல் கமலும் இக்கதையைப் படமாக எடுக்க முயற்சி செய்தார். ஆனால் கமலின் ஆசையும் நிறைவேறவில்லை. இப்படிப் பலரின் கனவுப் படமான பொன்னியின் செல்வனை தற்போது மணிரத்னம்தான் நிஜமாக்கி இருக்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் போஸ்டர், டீஸர், இசை வெளியீட்டு விழா என அனைத்துமே மக்களிடம், படத்தினுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்திருக்கின்றன. வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்பிரமாண்ட படத்தினைப் பற்றி தினம் ஒரு தகவலை அறிவோம். அந்த வகையில் இன்று ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாபாத்திரங்களையும், படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்.

`பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் பட்டியல்!

சுந்தர சோழர் – நாவலில், சோழ நாட்டின் அரசர். குந்தவை, அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் மூவரின் தந்தை. பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

ஆதித்த கரிகாலன் – சோழ நாட்டின் அரசன் சுந்தர சோழரின் மூத்த மகன். இளவரசராக முடி சூடப்பட்டவர். குந்தவை, அருள்மொழி வர்மரின் அண்ணன். சிறுவயதிலேயே போர் புரியும் திறன் கொண்டு விளங்கியவர். படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார்.

அருள்மொழி வர்மன் – சுந்தர சோழரின் மகன். ஆதித்த கரிகாலன், குந்தவையின் தம்பி. இலங்கைக்குப் படைத் திரட்டிச் சென்று சோழ நாட்டிற்காக போர் செய்து வருபவர். சோழ மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்திருக்கிறார்.

வந்தியத் தேவன் – வாணர்குல இளவரசன். பல்லவ நாட்டிலிருக்கும் ஆதித்த கரிகாலன் சொன்னதன் பேரில் தஞ்சையில் உள்ள ஆதித்த கரிகாலனின் தந்தை சுந்தர சோழருக்கும், தங்கை குந்தவைக்கும் தூது கொண்டு செல்பவராக நாவலில் அறிமுகமாகிறார். படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார்.

குந்தவை – சுந்தர சோழரின் மகள். அண்ணன் ஆதித்த கரிகாலன் பல்லவ நாட்டிலும், தம்பி அருள் மொழி வர்மன் இலங்கையிலும் இருக்க பழையாறை அரண்மனையில் வசிப்பவர். சோழ நாட்டிற்கு வரப்போகும் பகையை எதிர்க்க திட்டம் வகுப்பதில் கவனமாக இருப்பவர். த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குந்தவையாக த்ரிஷா

குந்தவையாக த்ரிஷா

நந்தினி – திருமலையின் தங்கை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டையரின் மனைவி. வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்கத் திட்டமிடும் பெண். இக்கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

பூங்குழலி – காண்போர் மயங்கும் அழகிய பெண பூங்குழலி. இவர் தியாகவிடங்கரின் மகள். படகோட்டி முருகய்யனின் தங்கை. சேந்தன் அமுதனின் காதலி. படகு ஓட்டுவதில் திறமைசாலி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

வானதி – கொடும்பாளூர் இளவரசி. அருள்மொழி வர்மனின் மனைவி. குந்தவையின் தோழி. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஷோபிதா நடித்திருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.