சேலம்: சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடுத்த புகாரின்படி, இடைப்பாடி பக்கமுள்ள வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன்(38) என்ற சினிமா டைரக்டரும், அவரது உதவியாளர் மற்றும் தோழியான ஜெயஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்த மெமரிகார்டு, லேப்டாப், செல்போன்கள், கம்யூட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேல்சத்தியன், ஜெயஜோதி ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோதா உத்தரவிட்டார். அதன்படி சேலம் மத்திய சிறையில் உள்ள வேல்சத்ரியனையும், கோவை பெண்கள் சிறையில் உள்ள ஜெயஜோதியையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.