புதுச்சேரி-புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவமனை அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. ஒரு லட்சத்தை நுாதன முறையில் திருடிய ஐதராபாத் வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.புதுச்சேரி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்,60; இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார்.இவரது மொபைல் போனுக்கு கடந்த ஏப்., 11ம் தேதி ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், வங்கி கணக்கு எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும், அதில் ஒரு குறியீடும் இருந்தது.இதையடுத்து, சீனிவாசன் அந்த குறியீடு மூலம் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண்ணை அதில் பதிவிட்டார். சற்று நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.72 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.6,500 என மூன்று முறை பணம் எடுத்ததாக மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., வந்தது.அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின் பேரில், எஸ்.பி., சுபம்கோஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் விசா ரணை செய்தனர்.அதில், சீனிவாசன் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியது தெலுங்கான மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த அபுதாலா,26; என்பது தெரியவந்தது.அதன்பேரில் போலீசார் ஐ தராபாத் சென்று நேற்று முன்தினம் அபுதாலாவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து மொபைல் போன், வங்கி கணக்கு புத்தகத்தை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ஐதராபாத்தில் டீ கடையில் வேலை செய்து கொண்டே, சமூக வலைதளங்களில் நுாதன முறையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடி வந்தது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து போலீசார், கைது செய்யப்பட்ட அபுதாலாவை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

போலீசார் எச்சரிக்கை:

மொபைல் போனில், ஆதார், பான்கார்டு இணைப்பு மட்டுமன்றி இணையதளம் லிங்க் ஏதேனும் வந்தால், விசாரித்து அதை உண்மையென தெரிந்தால் மட்டும் பயன்படுத்த வேண்டும். போலி என தெரியவந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்திடுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: