உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையேயான போரில் உக்ரைன் படையினர் தீவிர எதிர்தாக்குதலில் ஈடுபட்டுவருவதாகக்  கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின், நாட்டு மக்களிடையே நேற்று நிகழ்த்திய தேசிய உரையில், ஓர் பெரிய ராணுவ அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், புதினிடமிருந்து இத்தகைய ராணுவ அழைப்பு வெளிவருவதற்கு முன்னர் ரஷ்யாவில் நடந்த ஓர் நிகழ்வு இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, நேற்று நடந்த புதின் உரை நிகழ்ச்சி முதலில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், செவ்வாயன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ரஷ்யர்கள் பலரும் கூகுளில், “How to leave russia” – ரஷ்யாவிலிருந்து வெளியேறுவது எப்படி? மற்றும் “How to Break an Arm at Home” – போரைத் தவிர்க்க வீட்டிலேயே கையை உடைத்துக்கொள்வது எப்படி?” என்று தேடலில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.

புதின்

புதின்
Pavel Byrkin

தொடர்ந்து கூகுளில் இந்த தேடல் அதிகரிக்கவே, புதினின் உரையும் புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதையடுத்துதான் புதின், ரஷ்ய மக்களுக்கு பெரும் ராணுவ அழைப்பு விடுத்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரஷ்யாவில் விடுக்கப்பட்ட முதல் ராணுவ அழைப்பு இதுவென்றும் கூறப்படுகிறது.

உக்ரைனில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று புதின் அறிவித்துள்ளார். ராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் போரிட அழைக்கப்படுவார்கள் என்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.