நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும், அவரது நண்பர்களும் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 20 நாள்களுக்கும் அதிகமாகச் சிறையிலிருந்த ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், அவர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றப்பத்திரிக்கை தாக்கலில் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஆர்யன் கான். இதனால் ஷாருக்கானும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது ஆர்யன் கான் கதாசிரியர், இயக்குநராகக் களமிறங்கப் போகிறார் என்றும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கௌரி கான், ஷாருக் கான்

கௌரி கான், ஷாருக் கான்

இந்நிலையில் ஷாருக்கானின் மனைவியும் ஆர்யன் கானின் அம்மாவுமான கௌரி கான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது மகன் ஆர்யன் கானின் கைது சம்பவம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர், “ஒரு குடும்பமாகவும், பெற்றோராகவும் நாங்கள் அனுபவித்த சோகங்களை வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. அதிலும் ஒரு அம்மவாக நான் அனுபவித்த துயரத்தை யாரும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் நேசித்தபடி இருக்கிறோம். இந்தத் துயர்மிகுந்த காலம் எல்லோர் மீதும் அன்பைச் செலுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. எங்கள் நண்பர்கள், உறவினர்கள், யாரென்று தெரியாத பலர் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.