Loading

‘புல்புல்’ பறவை மூலம் தேடியும் தென்படாத மதுரை AIIMS கட்டடம்’ … பாஜக தலைவரைக் கலாய்த்த மதுரை எம்.பி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம்

துரையில் எய்ம்ஸ் ( AIIMS) மருத்துவமனை கட்டப்பட இருக்கும் இடத்தை இன்று பார்வையிட்ட மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர், பாஜக தலைவரைக் கலாய்க்கும் விதமாக “95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே” என்ற பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்களை, தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 ஆண்டுகளாகியும் சுற்றுச் சுவர் மட்டும்தான்….

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க பிரதமர் மோடி, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இதற்காக 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி, “மத்திய அரசு கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி ஒற்றை செங்கல்லை எடுத்துக் காட்டி பிரசாரம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகள் ஆகியும் சுற்றுச் சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, கட்டுமான வேலைகள் எதுவும் தொடங்கப்படாத நிலையே உள்ளதால், கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மதுரை மக்களிடையே உள்ளது.

ஜே.பி.நட்டா

95% பணிகள் நிறைவா… ஜே.பி. நட்டா சொன்னது என்ன?

இத்தகைய சூழலில் இரண்டு நாள் பயணமாக நேற்று

* தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக கூறினார் எனச் செய்திகள் வெளியானது.

* நேற்று மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 1264 கோடி ஒதுக்கப்பட்டது.

* கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமையவுள்ளது.

* மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இன்று எய்ம்ஸின் 95% பணிகள் மிக விரைவில் முடிவடைந்துள்ளன.

* அது இந்திய பிரதமரால் விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த செய்தியை ஆமோதிக்கும் விதமாக அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, “ ஒரு செங்கல்லை மட்டும் யாரோ திருடன் கொண்டு போயிட்டான்” எனப் பதிவிட்டிருந்தார்.

ஜே.பி. நட்டாவைக் கலாய்த்த எம்.பி-க்கள்

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட இருக்கும் இடத்தை இன்று பார்வையிட்ட மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ர்ந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர், பாஜக தலைவரைக் கலாய்க்கும் விதமாக

சு. வெங்கடேசன் ட்விட்டர் பதிவு

“95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே?” என்ற பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்களை, தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ” உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை.

* அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்.

* பாஜக ஆட்சி ‘புல்புல்’ பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக் தாகூரும் போனோம்.

* கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மாணிக்கம் தாகூர்

அதேபோன்று மாணிக்கம் தாகூர், “ நேட்டாஜி, 95% முடிந்த #மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூரில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டடத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்..” என வடிவேலுவின் ‘கிணத்தைக் காணோம் ஸ்டைலில் அங்கு சென்ற படங்களுடன் பதிவிட்டிருந்தார்.

பாஜக விளக்கம்

இந்த இரு பதிவுகளும் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளதையே நட்டா கூறியிருந்ததாக பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பூர்வாங்க பணிகளைக் குறிப்பிட்டே நட்டா அவ்வாறு பேசி இருக்கலாம் என்பதை ஊகித்து, சில ஊடகங்கள் ‘பூர்வாங்க பணிகள்’ என்றே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் தனது ட்விட்டர் பக்கத்தில், நட்டாவின் பேச்சை விமர்சிக்கும் ஒரு பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, ” நீங்கள் தவறாகக் கூறியுள்ளீர்களா அல்லது தவறாக மேற்கோள் காட்டியுள்ளீர்களா? கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும்தான் நட்டா கூறினார்” எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு… வாகனங்கள் உடைப்பு! – பதற்றத்தில் கோவை

வாகனத் தணிக்கை

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி, அவரைக் கைதுசெய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

அதிமுக: ஓ.பி.எஸ்-ன் அடுத்த மூவ் என்ன?

ஓபிஎஸ்

திமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்ட விதிகளைத் திருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக-வை கைப்பற்றுவதில் எடப்பாடி வேகம் காட்டிவரும் நிலையில், பன்னீர் தரப்பு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இது குறித்து பன்னீர் தரப்பு மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

” நல்ல சாப்பாடு கொடுக்கணும்னு நினைச்சார்; ஆனா…”- ரெய்டு குறித்து குமுறும் சூரி உறவினர்கள்

சூரி – அம்மன் உணவகம்

டிகர் சூரி மதுரையில் `அம்மன் உணவகம்’ என்கிற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டியை வசூலிக்காமல் உணவை விற்றதாக வணிகவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால் சூரி தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது.

ரெய்டின் முடிவில் மூன்று நாட்களில் அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதோடு, விடுபட்ட ஆவணங்களையும் காட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ‘ரெய்டில் என்னதான் நடந்தது?

சூரிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

203* – பாபர் அசாம் – ரிஸ்வான் கூட்டணியும்; அதிர்ந்துபோன இங்கிலாந்தும்!

Babar & Rizwan

ங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் வெறியாட்டம் ஆடியிருக்கின்றனர். இங்கிலாந்து அணி செட் செய்த 200 ரன்கள் டார்கெட்டை விக்கெட்டே இழக்காமல் எட்டிப்பிடித்து பல பழைய சாதனைகளையும் அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கியிருக்கின்றனர்.

தொடர்ந்து கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கும் இந்தக் கூட்டணியைப் பற்றி விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

Thunivu லேட்டஸ்ட் அப்டேட்ஸ்: படத்தின் கதை… அஜித் – விஜய் டீமில் இணைகிறாரா பாலிவுட் பிரபலம்?

அஜித், சமுத்திரகனி

`வலிமை’க்குப் பிறகு அஜித் மூன்றாவது முறையாக வினோத்தின் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ என படங்களின் மூலம் தனித்தன்மையை நிரூபித்தவர் வினோத்.

அடர்த்தியான கதை, புருவம் உயர்த்தும் சம்பவம், போலீஸ் ஸ்டோரி இதெல்லாம் ஹெச். வினோத்தின் அசைக்க முடியாத பலம் என ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் அவர் நிரூபித்தார்.

ஆகையால், இம்முறை தன்னை மீண்டும் நிரூபிக்கவே உண்மை சம்பவம் ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *