லக்னோ: லக்னோவில் புகைப்பட ஸ்டுடியோவிற்கு சென்ற மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகைப்படக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த தாலிகஞ்ச் பகுதியில் வசிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர், தனது பள்ளியில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கேட்டதால், அருகில் இருந்த ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கிருந்த புகைப்படக்காரர் மகேந்திர ஜெய்ஸ்வாலிடம், தனது பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த நேரம் போட்டோ ஸ்டுடியோவில் மகேந்திர ஜெய்ஸ்வாலைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், மாணவியிடம் புகைப்படம் எடுப்பதாக கூறி அவரது துப்பட்டாவை சரிசெய்யச் சொன்னார். அப்போது, திடீரென மாணவியின் உடலை தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதிர்ச்சியடைந்த மாணவி, போட்டோ ஸ்டுடியோவை விட்டு வெளியேற முயன்றார். ஆனால், அந்த மாணவியை மிரட்டி, இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

இருந்தும் அவரது பிடியில் இருந்து தப்பிய மாணவி, அவரது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தார். அவர்கள் ஹசன்கஞ்ச் காவல் நிலையத்தில் மகேந்திர ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்தனர். அதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளி மகேந்திர ஜெய்ஸ்வாலை தேடி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.