பிரதமர் நரேந்திர மோடியின் 72-ஆம் ஆண்டு பிறந்தநாள் பொதுக் கூட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். மேலும் மாநில தலைவர் கே.அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுக் கூட்டத்தில் கே. அண்ணாமலை பேசியதாவது, “வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த பூமியில் தேசியத் தலைவர் பேச வைப்பது பாஜகவுக்கு பெருமை. தமிழகத்தில்  இருள் சூழ்ந்தது போல் திமுக சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் பெட்டி கடைகளில் கூட கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்யாமல், தன்னை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை ஸ்டாலின்  கைது செய்கிறார்.

 

ஆ.ராசா இந்து தாய்மார்களை கொச்சப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு

 9 மாவட்டங்களில் பாஜக தொண்டர்கள் 107 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் மண்ணுக்கு போய்விட்டனர். தவறை தட்டிக் கேட்டால் குற்றம் என்றால், தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இதன் மூலம் தமிழக சிறைச்சாலைகள் நிரம்பும். ஒன்றும் செய்யாமல் நம்பர் 1 – ஆக வர  வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். மீசா வழக்கில் சிறைக்கு சென்றதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவர் வேறு எதற்கோ தான் சிறைக்கு சென்றார். தமிழகத்தில் இனி அதிரடி அரசியல் இருக்கும்.

 

மின் கட்டணத்தை 50 % குறைப்பேன் என்று சொல்லி வாக்கு வாங்கிவிட்டு 54 % உயர்த்தி விட்டனர்.  பால் விலையை 3 முறை உயர்த்திவிட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை ஒரு முறை கூட உயர்த்தவில்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் மோடியை காரணம் காட்டுகின்றனர். அவர் எப்போது ? உயர்த்த சொன்னார் சொல்லுங்கள். மோடி 10,000 நல்ல விஷயங்கள் செய்ய சொல்லி உள்ளார்.  அதை செய்யாமல், சொல்லாததை செய்து விட்டு, அவரை குறை சொல்கின்றனர். ஸ்டாலின் திருத்திக் கொள்ள வேண்டும். திமுகவிலேயே அதிருப்தி உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா  ஜிஎஸ்டி வருவாய்  அதிகரிக்கின்றது.  அங்கு சாதாரண நிதியமைச்சர்கள்.  ஆனால் தமிழகத்தில் அறிவுஜீவி நிதியமைச்சர் வாய் தான் பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு எல்இடி பல்பிற்கு கூட மின்சாரத்தை தயாரிக்கவில்லை. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியத்திற்கு  வருவாய் வந்துள்ளதாக கூறுகின்றனர். இதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

 

 

ராகுல் காந்தி பாதையாத்திரையின் போது, பிரிவினை வாதிகளை சந்தித்து வருகிறார்.  அவரது ஷூ தேய்கிறதோ இல்லையோ, காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். காஷ்மீரை ராகுல் அடையும்போது, காங்கிரஸ் கரைந்துவிடும், என்றார்.

 

கூட்டத்தில் பி.ஜே.பி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது..,”தமிழகம் புன்னிய பூமி. பல விடுதலை போராட்டகாரர்களை தந்துள்ளது. அறிவு ஜீவிகள் நிறைந்த மண்.  தேசிய அரசியலில் தவிர்க்க முடியாததாக தமிழகம் உள்ளது. மோடி அரசு கரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல் பட்டதால் தான்  நாம் யாரும் முககவசம் அணியாமல் தைரியமாக இருக்கிறோம்.  இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் முன்னேறவில்லை. சமூகம் சார்ந்தும் முன்னேறியுள்ளது.  தற்போது நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்த்து  அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  நம் நாடு  ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்தது. தற்போது ரூ.8,400 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. விவசாயத்துறைக்கு ஒதுக்கீட்டை 5 மடங்கு உயர்த்தியுள்ளது. ரூ.27,000 கோடியில் இருந்து ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

பாஜக கொள்கை அடிப்படையிலான கட்சி, அனைத்து மாநிலங்களிலும்  தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் சுருங்கி மாநில கட்சிகளாக மாறிவிட்டன. இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசைகட்டி வருகின்றனர். அந்த மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது. நீட் தேர்வால் கிராம மக்கள் எளிதில் மருத்துவ படிப்பை பெருகின்றனர். தேசிய கல்வி கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் பேசுகின்றனர்.  இதில் மருத்துவ படிப்பை கூட தமிழில் படிக்கலாம். திமுக என்றல் குடும்பம் அரசியல், பணம் வசூல், கட்டபஞ்சாயத்து தான். மாநில வாதம் பேசும் திமுக தமிழ்க்காக என்ன செய்தது.  தமிழகத்தில் தாமரை மலரும், என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.