இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தும் செல்போன், ஐபேட் போன்ற கெஜட்டுகள் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் பயன்பாட்டு சேவைகளை வழங்குகின்றன. இவை பயனாளர்களுக்கு சிறந்த வசதிகளையும் அனுபவத்தையும் தருகின்றன. ஆனால், அமெரிக்காவில் கெஜட் கருவி மூலம் ஒரு குடும்பமே பெரும் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.

அமேசானின் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீகரான அலெக்சாவை பலரும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இணைய சேவை மூலம் இயங்கி வரும் ஸ்மார்ட் கருவியான அலெக்சா, தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசும். பயனாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நொடி பொழுதில் பதில் சொல்லும், விரும்பிய பாடலை பிளே செய்யவும், விரும்பிய கதை கேட்கவும் மேலும் பல சேவைகளை பெறவும் இந்த கருவி பயன்படுகிறது. செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இயங்கி வரும் இந்த அலெக்சா அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரை காத்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த அரசு செய்தி தொடர்பாளரான பீட் பிரிஞ்சர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வீட்டில் அலெக்சா கருவி உள்ளது. இவர்கள் தங்கள் வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது அலெக்சா கருவி அவசர அலெர்ட் கொடுத்துள்ளது. என்னவென்று விழித்து பார்த்தபோது அவர்கள் வீட்டில் உள்ள கேஜேரில் நெருப்பு பற்றி புகை வந்துள்ளது. நல்ல வேலையாக அலெக்சா கொடுத்த எச்சரிக்கை காரணமாக இவர்கள் நெருப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அனைத்து பெரும் தீவிபத்தை தவிர்த்துள்ளனர். இல்லையென்றால் தூக்கத்தில் தீ பரவி விபத்து ஏற்பட்டிருந்தால் ஆறு பேரின் உயிரும் பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கும் என்றார்.

இதையும் படிங்க: ஈரானில் பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம் : தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!

இவர்கள் கேரேஜில் எல்க்ட்ரிக் பைக் சார்ஜ் செய்த போது ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணமாக இருக்க இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு ஸ்மார்ட் கருவி பெரும் உயிர் சேதத்தை காத்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.