புதுடெல்லி: இதுவரை நடந்த தீவிரவாத தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் இதுபோல மெகா சோதனை நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு உதவுதல், நிதியுதவி அளித்தாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 100-கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.