தன்னுடைய திருமண அழைப்பிதழ் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ஒரு நபர் திருமண அழைப்பிதழை மாத்திரையின் பின்பக்கம் உள்ள அட்டை போலவே வடிவமைத்திருந்தார். இந்த திருமண அழைப்பிதழ் டிரண்ட் ஆனதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் பிரபலங்களான நடிகை ரிச்சா சதா ,நடிகர் அலி பைசலின் திருமண அழைப்பிதழும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரிச்சா சதா , இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தாஸ் தேவ், , பங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ரிச்சா சதா, அலி பைசல்

ரிச்சா சதா, அலி பைசல்

அமேசான் பிரைமில் வெளியான இன்சைட் எட்ஜ் என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பக்ரி படத்தில் ரிச்சாவுடன் நடித்த நடிகர் அலி பைசலும், ரிச்சா சதாவும் காதலித்து வந்தனர். 2020ம் ஆண்டு நடக்கவிருந்த இவர்களது திருமணம் கொரோனாவால் நடைபெறவில்லை. இந்நிலையில் ரிச்சா சதா மற்றும் அலி பைசல் ஜோடியின் திருமணம் அக்டோபர் 4 ம் தேதி நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் குறித்த செய்திகளுக்கு மத்தியில், தற்போது தீப்பெட்டி போலவே வடிவமைக்கப்பட்டுள்ள அவர்களின் திருமண அழைப்பிதழின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.