உத்தரப் பிரதேசத்தில் நம் மனதையே உலுக்கக்கூடிய ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுமி, 5 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பின், 2 கி.மீ தூரம் உள்ள தனது வீட்டிற்கு ரத்தம் சொட்ட, சொட்ட நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது. 

இந்த சம்பவம் நிகழ்ந்து 15 நாள்களுக்கு பின், தற்போது அந்த பெண் சாலையில் நிர்வாணமாக நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 30 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில், அந்த பெண் நிர்வாணமாக, ரத்தம் வழிய நடந்து கொண்டிருந்தது அதில் பதிவாகியிருந்தது. 

எச்சரிக்கை: மனதை உலுக்கும் கடுமையான தகவல்கள் கீழே உள்ளன. 

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுமியை 5 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகப்பட்டுள்ளார். அந்த அதிர்ச்சியில், சிறுமி நடந்தே அவரது வீடுவரை நிர்வாணமாக சென்றுள்ளார். காரில் இருந்து அந்த சிறுமியை தூக்கி வீசிய குற்றவாளிகள், அவருக்கு சிறு துணியைக் கூட கொடுக்கவில்லை.

மேலும் படிக்க | கர்நாடக மாநிலத்தில் நடந்த தீண்டாமையின் உச்சம்; நடந்தது என்ன?

அந்த சிறுமி அத்தனை துயரில் நடந்து வந்த போதும், வழியில் சென்ற ஒருவர் கூட அவருக்கு உதவ முன்வரவில்லை என்பது அதைவிட மிகவும் துயரமானதாகும்.  அந்த வழியே சென்றவர்கள் உதவ வரவில்லை என்பது மட்டுமின்றி, அந்த சிறுமியை அவர்கள் வீடியோ எடுத்த கொடுமையும் நடந்துள்ளது. அந்த வீடியோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. 2 கி.மீ., தூரத்திற்கு ரத்தம் வழிய நடந்து சென்ற அந்த சிறுமி, வீட்டிற்கு சென்ற உடன் நடந்த அனைத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, அவரின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர், அப்பகுதி காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதன்பின்னர் மாவட்ட  மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் அளித்த பின்னரே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடந்த செப்.7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகளின் குடும்பத்தினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் திருவிழாவை பார்ப்பதற்கு அந்த சிறுமி சென்றதாகவும், அப்போது, ஐந்து பேர் அந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியினர், அப்பகுதிக்கு விரைந்த நிலையில், குற்றவாளிகள் சிறுமியை காரில் இருந்து, தூக்கி வீசிவிட்டு, சிறுமியின் ஆடையுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

இதுகுறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மீனா கூறுகையில்,”சட்டப்பிரிவு 376டி-கீழும் (கூட்டு பாலியல் வன்புணர்வு), போக்சோ பிரிவின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | விஸ்வரூபமெடுக்கும் சண்டிகர் பல்கலை. வீடியோ விவகாரம் : சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.