சிறுமிக்கும் 24 வயது தீட்சிதருக்கும் திருமணம் செய்துவைத்த வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மூன்று பேரை கைதுசெய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிறுமிகளுக்கு திருமணம் செய்வதை வழக்கமாக நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்து வந்து வேலையிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஒரு சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். அதனை தற்போது சிலர் ஆதாரப்பூர்வமாக சமூக நலத்துறைக்கு தகவல் கொடுக்கவே சமூக நலத்துறை காவல்துறைக்கு புகார் கொடுத்தது.

image

புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், அதிரடியாக தனிப்படை அமைத்து சிதம்பரத்தில் சிறுமிக்கு திருமணம் செய்தவர்களை சுற்றி வளைத்து கைது செய்து, சிதம்பரத்தில் வைத்து விசாரணை செய்யாமல் கடலூருக்கு அழைத்து வந்து அவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் 24 வயது தீட்சிதற்கும் திருமணம் நடந்தது உறுதியானது.

image

இதனை அடுத்து சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சதர் மாப்பிள்ளையின் தந்தை கணபதி தீட்சிதர் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்தனர். பல ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சர்ச்சையாக இருந்து வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: