நடிகர் அஜித்தின் ‘ஏ.கே. 61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இந்தத் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய், சிபி சந்திரன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிக நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளிவராத நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளிவரலாம் என்று நேற்று தகவல்கள் வெளியானது. ‘துணிவே துணை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டது.

image

இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் துப்பாக்கியுடன் நாற்காலியில் சாய்ந்து ரிலாக்ஸாக இருப்பதுபோல் இருக்கின்றது. ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: