வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தாண்டு துவக்கத்தில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 340 கோடி ரூபாயும், காங்கிரஸ் 194 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளன.
இந்தாண்டு துவக்கத்தில், உ.பி., கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் செலவிடப்பட்ட தொகை குறித்த விபரங்களை, பா.ஜ., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதன்படி, அக்கட்சி ஐந்து மாநிலங்களிலும் 340 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அதிகபட்சமாக உ.பி.,யில் 221 கோடி; மணிப்பூரில் 23 கோடி; உத்தரகண்டில் 43 கோடி; பஞ்சாபில் 36 கோடி; கோவாவில் 19 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது.

latest tamil news

இந்த ஐந்து மாநிலங்களிலும் 194 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தாண்டு இறுதியில், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர்கள் அடுத்த வாரம் இங்கு
செல்லவுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.