இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளிக்கு இடையேயான 2 ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தானா 91 ரன்கள் விளாசி அசத்தினார். இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தானா மகளிர் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அதிகவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தானா படைத்துள்ளார். 

 

இவர் 76 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இவருக்கு முன்பாக இந்திய அணியின் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் 88 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து இருந்தார். அவரின் சாதனையை ஸ்மிருதி மந்தானா முறியடித்துள்ளார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 3000 ரன்களை கடந்த மூன்றாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானா உள்ளார். 

அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீராங்கனைகள்:

பெலிண்டா கிளார்க்- 62 இன்னிங்ஸ்

மேக் லெனிங்-64 இன்னிங்ஸ்

ஸ்மிருதி மந்தானா-76 இன்னிங்ஸ்

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தற்போது வரை 22 பேர் 3000 ஒருநாள் ரன்களை கடந்துள்ளனர். அவர்களில் பெலிண்டா கிளார்க் 62 இன்னிங்ஸில் 3000 ஒருநாள் ரன்களை அதிவேகமாக கடந்து இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக மேக் லெனிங் 64 இன்னிங்ஸில் 3000 ஒருநாள் ரன்களை கடந்து இருந்தார். அவர்களுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் தற்போது ஸ்மிருதி மந்தானா இணைந்துள்ளார். 

3000 ஒருநாள் ரன்களை கடந்த இந்திய வீராங்கனைகள்:

ஸ்மிருதி மந்தானா-76 இன்னிங்ஸ்

மித்தாலி ராஜ்-88 இன்னிங்ஸ்

ஹர்மன்பிரீத் கவுர்- 101 இன்னிங்ஸ்

இதன்மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தானா பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்துள்ளனர். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் 7805 ரன்களுடன் மித்தாலி ராஜ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: மீண்டும் லண்டனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி .. எந்த மைதானம் தெரியுமா?

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *