இது குறித்து உள்ளூர் தலைவர்கள் சிலர் கூறுகையில், “உள்ளூர் அச்சகம் ஒன்றில், சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களின் புகைப்படங்களை அச்சடிக்கும் படி கூறியிருந்தோம். அச்சடித்ததும்… கவனிக்காமல் போஸ்டரை ஒட்டிவிட்டோம்”, என்று விளக்கம் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “சிபிஐ-எம் காங்கிரஸை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. டிசம்பர் மாதம் 1989-ஆம் ஆண்டு, வி.பி சிங்கை ஆதரித்து இந்துத்துவா அமைப்புகளுடன் கைகோர்த்திருந்தது அனைவரும் தெரிந்த உண்மையே”, என விமர்சித்துள்ளார்.

இதுபற்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுரேஷ் கூறும்போது, “நேற்று முன்தினம் இரவு 10-மணிக்குதான் ஃபிளக்ஸ் போர்டு வைக்கச்சொன்னார்கள். 80 அடி நீளமான பிளக்ஸ் போர்டின் புரூப் சரியாக பார்க்கமுடியவில்லை. நள்ளிரவு ஒரு மணிக்கு ஃபிளக்ஸ் கிடைத்ததும், வைத்துவிட்டோம். அன்வர் சதாத் எம்.எல்.ஏ அழைத்து சொன்னபோதுதான் சாவர்க்கர் போடோ இருந்தது எனக்கு தெரியவந்தது. ஒரு நிமிட கவனமின்மை யாத்திரையை விவாதமாக்கிவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக கட்சி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்றார்.