தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது. இதில் அஜித்தின் 61வது படத்திற்கு துணிவு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் தொடர்படம் பிரபல நடிகர் சமுத்திரகனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “துணிவு.. வெல்வோம்” எனக் கூறியுள்ளார். மேலும் அந்தப் பதிவில் நடிகர் அஜித் உடன் சமுத்திரகனி இணைந்து இருக்கும் படம் ஒன்றும் உள்ளது. இந்த துணிவு படத்தில் சமுத்திரகனி நடித்த இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் சமுத்திரகனியின் இந்தப் படம் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனினும் அவர் இப்படத்தில் நடித்திருப்பது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 

வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்று விட்ட நிலையில் அஜித் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அங்கு செல்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என சொல்லப்பட்ட நிலையில் படம் அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களை தாண்டிவிட்ட நிலையில் இதுவரை எந்தவித அப்டேட்டுகளும் வெளியாகவில்லை. 

 


இதனால் வழக்கம்போல அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களை ரசிகர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். #AK61 ஹேஸ்டேக்குகளை போட்டு போனிகபூர், ஹெச்.வினோத், மஞ்சுவாரியர் உள்ளிட்டோரிடம் அப்பேட் கேட்டனர். இந்நிலையில் AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதனால் ட்விட்டரில் #AK61FirstLook, #AjithKumar ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.