Loading

உக்ரைக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா அதிகரித்து வரும் சூழலில் உக்ரைன் மீதான போரைத் தீவிரப்படுத்தும் எல்லா நடவடிக்கைகளை ரஷியா தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்குவும் , தொலைக்காட்சி வாயிலாக நிகழ்த்திய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொலைக்காட்சி உரையில் அவர்கள் கூறியது, ‘’நமது ரஷிய ராணுவத்திற்கு வீரர்கள் சேர்க்கும் பணி இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சிபெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள். மேலும் போருக்காக ரஷ்யாவில் கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் திரட்டப்பட இருக்கிறார்கள்’’ என்றனர்.

image

இந்த உரையைத் தொடர்ந்து, ரஷ்யாவில் மக்கள் போராட்டங்களில் இறங்கினர். ரஷியா முழுவதும் 38 நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டத்தில் 1300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ரஷ்யாவைச் சேர்ந்த 18 முதல் 65 வயது வரையிலான ஆண்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல டிக்கெட் விநியோகம் செய்ய மறுப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத்தில் இணையும் தகுதி உடைய வயதைக் கொண்டவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் 18 – 65 வயதுடைய ஆண்களுக்கு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்றுயிருக்க வேண்டும் என்ற தகவலும் அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *