லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட் அளித்துள்ள பேட்டி: மற்றவர்கள் இதை பற்றி பேசுவார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எனது பார்வையில், இந்திய அணியின் உடற்தகுதி கோஹ்லி, ஹர்திக் பாண்டியாவை தவிர மற்றவர்களிடம் சிறந்ததாக இல்லை. பந்துவீச்சிலும் வேகம் குறைந்ததாக உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுல் களத்தில் சோர்வாக காணப்படுகிறார். முதல் போட்டியில் ஸ்மித்தின் கேட்ச்சை கைவிட்டது இதற்கு ஒரு உதாரணம்.

மிட் விக்கெட் திசையில் அக்சர் படேல் எளிய கேட்சை கோட்டை விட்டார். இதுபோன்ற கேட்ச்களை நீங்கள் கைவிட்டால், பேட்டர்கள் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்கள் இந்தியர்கள். அவர்கள் அதிக போட்டிகளில் விளையாடுகிறார்கள். அவர்களின் உடல் தகுதி ஏன் சரியாக இல்லை என்று சொல்லுங்கள்?. தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற மற்ற அணி வீரர்களின் உடற்தகுதியை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்திய வீரர்கள் பின்தங்கி உள்ளனர்.

சில வீரர்கள் அதிக எடையுடன் உள்ளனர். விராட் கோஹ்லி உடற்தகுதியில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். ஜடேஜா, ஹர்திக் மிகவும் ஃபிட்டாக உள்ளனர். அவர்களுக்கு சிறந்த உடற்தகுதி உள்ளது, ஆனால் ரோகித்சர்மா, பன்ட் குண்டாக இருப்பதால் டி.20 போட்டிக்கு தகுதியற்றவர்கள். கே.எல்.ராகுல், பன்ட் உடற்தகுதி பெற்றால், மிகவும் ஆபத்தான கிரிக்கெட் வீரர்களாக மாறுவார்கள், என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *