பண்ண வரைக்கும் போதும் : அப்செட்டான ரச்சிதா

22 செப், 2022 – 11:48 IST

எழுத்தின் அளவு:


Rachitha-mahalakshmi-upset

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரச்சிதா மஹாலெட்சுமி. விஜய் டிவியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த சேனலை விட்டு விலகிய அவர், கலர்ஸ் தமிழ் சேனலில் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த தொடரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் தொடர்கள் பட்டியலில் இடம்பெற்றது.

இந்நிலையில், ஹிந்தியில் இரண்டு சீசன்களாக 370 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடரானது தற்போது தமிழில் வெறும் சுமார் 150 எபிசோடுகளுக்குள்ளாகவே முடித்து வைக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஒருபுறம் வருத்தமடைந்துள்ளனர். மற்றொருபுறம் இந்த சீரியலின் கதாநாயகி ரச்சிதா மஹாலெட்சுமி விரக்தியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் தனது பதிவுகளில், ‘இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என நண்பர்கள் சொல்லியபோது அவர்களை எதிர்த்து பதிலடி கொடுத்து தான் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது அவர்கள் சொல்லியது உண்மை என்று ஆகிவிட்டது. நன்றாக சென்று கொண்டிருக்கும் சீரியலை தேவையில்லாமல் முடித்து வைத்துவிட்டார்கள். இனிமேல் இவர்கள் செய்யும் போலியான புரோமோஷன்களில் இருந்து ப்ரீயாக இருக்கலாம். நீங்க செஞ்ச வரைக்கும் போதும். நன்றி! வாழ்த்துகள்’ என்று வரிசையாக போஸ்ட் போட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: