அரியாங்குப்பம்-பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய ஐ.டி.ஐ., மாணவரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குமாரபுரத்தைச் சேர்ந்தவர் அஜய்,20; ஐ.டி.ஐ., படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் புதுச்சேரி அரியாங்குப்பம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி அறிமுகம் ஆனார். நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் பழகி வந்ததில் மாணவி கர்ப்பமடைந்தார்.இது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் தந்தை அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ‘போக்சோ’ பிரிவில் வழக்கு பதிந்து, அஜயை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.