மிட்சல் ஜான்சன் தங்கி இருந்த ஓட்டல் அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்து அதிர்ச்சி அளித்தது. இந்தியாவில், ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடர் (‘டி–20’) நடக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க ‘ஆல்–ரவுண்டர்’ காலிஸ் தலைமையிலான ‘இந்தியா கேப்பிட்டல்ஸ்’ அணிக்காக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் 40, விளையாடி வருகிறார். சமீபத்தில் லக்னோவில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின், ஓட்டல் அறைக்கு திரும்பிய ஜான்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அறையின் வாசல் கதவில் சிறிய பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.