மக்களின் பயணத் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது ரயில் போக்குவரத்து. குறைந்தக் கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். இதற்காக டிக்கெட்டை புக் செய்தாலும் எல்லா நேரங்களிலும் கன்பார்ம் ஆகாது. இதனையடுத்து தான் தட்கல் முறையை பெரும்பாலும் மக்கள் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை என பல்வேறு பண்டிகை நாள்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை ஒரு மாதத்திற்கு முன்பாக புக் செய்தாலும் டிக்கெட் கிடைப்பதில்லை.

எனவே இதுப்போன்ற சூழலிலிருந்து தப்பித்து டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றால் IRCTC மூலம் தட்கலில் புக் செய்யலாம். ஆனால் டிக்கெட் கன்பார்ம் ஆவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இதுவரை உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இப்போது நீங்கள் தெரிஞ்சுக்கோங்க…

பண்டிகைக் காலத்திற்கான தட்கல் டிக்கெட்டை ஐஆர்சிடிசியில் இருந்து உறுதிப்படுத்தும் வழிமுறைகள்:

விவரங்களைத் தயாராக வைத்திருத்தல்:

பொதுவாக கடைசி நிமிடங்களில் தான் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வோம். நம்மைப் போன்று பலர் தட்கல் டிக்கெட்டை எடுப்பதற்காகக் காத்திருக்கும் நிலையில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டாலும் டிக்கெட் உறுதியாகாது. குறிப்பாக வெயிட்டிங் மற்றும் ஆர்ஏசி-யில் டிக்கெட்டுகள் கிடைத்தால் தட்கலில் இதை கன்பார்ம் செய்ய முடியாது என்பதால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முன்னர் உங்களது விபரங்கள் மற்றும் உங்களது பயணப் பட்டியலைத் தயாராக வைத்திருங்கள். இதுப்போன்று உங்களது பயண விபரங்களை சேவ் செய்து வைக்கும் போது, புக்கிங் செய்ய மீண்டும் IRCTC இணையதளத்தில் என்ட்ரி செய்யத் தேவையில்லை.

இதோடு ஏசி தட்கல் டிக்கெட் முன்பதிவு தினமும் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு முன்பதிவுகள் காலை 11 மணிக்குத் தொடங்கும் என்பதையும் நினைவில் வைத்து சரியான நேரத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள். இதே நேரத்தில் பலர் முன்பதிவு செய்ய வருவதால் நிச்சயம் நெட் வொர்க் பிரச்சனை ஏற்படும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Also Read : ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்… வழிமுறை இதோ…!?

மாஸ்டர் பட்டியல் உருவாக்குதல்:

IRCTC இணையதளப்பக்கத்தில் “ எனது சுய விபரம்” பகுதிக்குச் சென்று அனைத்துப் பயணிகளின் தகவல்களுடன் ஒரு பட்டியலை உருவாக்கிக்கொள்ளுங்கள். இது எப்போது முன்பதிவு செய்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். தட்கல் டிக்கெட் வாங்க விரும்பும் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு தனி பயணப் பட்டியலை உருவாக்கிக்கொள்ளுங்கள். இது சில நிமிடங்களிலேயே உங்களின் அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.

இவ்வாறு பயணப் பட்டியல் தயாரானதும், அதைச் சேமித்துக் கொள்ளவும். இதன்பிறகு நீங்கள் முன்பதிவு செய்யும் போது, நீங்கள் confirm பட்டனைக் கிளிக் செய்துக் கொள்ளுங்கள். பயணப்பட்டியலைத் தேர்வு செய்தவுடன், அனைத்து விபரங்களும் தானாக உங்களுக்கு வந்து சேரும். இதனையடுத்து பேமென்ட் செய்வதற்கான பக்கம் திறக்கும். இதில் எவ்வளவு தொகையோ அதை செலுத்தி விட்டு உங்களுக்காக டிக்கெட்டை சுலபமாக கன்பார்ம் செய்யலாம்.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு – இந்தியன் ரயில்வே முடிவு

வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு செய்வோர் மேற்கூறியுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தட்கல் டிக்கெட்டை கன்பார்ம் செய்துக்கொள்ளுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.