வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி:குஜராத்தைச் சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான, 2,747 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

நாட்டின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனம் ஏ.பி.ஜி., ஷிப்யார்டு. நிறுவனத்தின் தலைமை அலுவலகங்கள் குஜராத்தின் டாகேஜ், சூரத் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த நிறுவனம் 28 வங்கிகளிடம், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது.

latest tamil news

இதையடுத்து, ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வால் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ரிஷி அகர்வாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அமலாக்கத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதுடன், சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும்ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான, 2,747 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *