தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மதுரை ஆவின் பால்பாக்கெட்டில் ஈ – வீடியோ வெளியானதால் நுகர்வோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மதுரை ஆவின் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப்படுகின்றன.  இவை, 40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட, 33வது வழித்தடத்தில் பால் வேன் மூலம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை, கீழமாத்துார் உள்ளிட்ட டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் வாங்கிய பெண் நுகர்வோர், பாக்கெட்டிற்குள், ‘ஈ’ இறந்து மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

 

 

உடன் டெப்போவில் திருப்பி ஒப்படைத்தார்.  இத்தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த ஆவின் நிர்வாகம் பேக்கிங் செய்யும் தவறு நடந்திருக்கலாம் எனவும் பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பால் பை நிரப்பும் பிரிவில் பணியாற்ற கான்ட்ராக்ட் பெற்ற பெங்களூரு தனியார் பேக்கிங் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அப்பிரிவின் துணை மேலாளர் சிங்காரவேலனை ‘சஸ்பெண்ட்’ செய்தும் ஆவின் பொதுமேலாளர் சாந்தி உத்தரவிட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.