வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவி என்பது நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ’ என்னும் பாத யாத்திரையை காங்., எம்.பி., ராகுல் நடத்தி வருகிறார். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (செப்.,24) தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இது தொடர்பாக 15வது நாளாக நடைபயணம் மேற்கொண்ட ராகுலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ராகுல் கூறியதாவது:

latest tamil news

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட கூடியவர்களுக்கு எனது அறிவுரை. நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் நிலையை எடுக்கிறீர்கள். இது ஒரு நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவியாகும். இது இந்தியாவின் நம்பிக்கை அமைப்பு மற்றும் பார்வையைப் பிரதிபலிக்கிறது.

உதய்பூரில் ஒருவருக்கு ஒரு பதவி என்று நாங்கள் எடுத்த முடிவு காங்கிரசின் அர்ப்பணிப்பாகும். கட்சியின் தலைவர் பதவியிலும் இந்த அர்ப்பணிப்பு தொடரும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.