Loading

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹிந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யான ராஜாவுக்கு எதிராக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், பா.ஜ.,வைச் சேர்ந்த மூன்று பெண் எம்.பி.,க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

‘வீடியோ’

தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி.,யான ராஜா, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

latest tamil news

இந்நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் மூன்று பேர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ராஜாவின் பேச்சு தொடர்பான பத்திரிகை செய்திகள், ‘வீடியோ’வின் எழுத்து வடிவம் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து உள்ளனர்.லோக்சபாவில் சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்துவதற்கு, எட்டு எம்.பி.,க்கள் தற்காலிக சபாநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒருவரான ராஜாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஹிந்துக்களையும், பெண்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள ராஜா, லோக்சபாவை வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

நடவடிக்கை
இது தொடர்பாக தி.மு.க., மூத்த தலைவர் பாலுவுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஓம் பிர்லா கூறியுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், சபையை வழிநடத்தும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பில் இருந்து ராஜா நீக்கப்படுவது உறுதி என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லி நிருபர் –


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *