சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர், 15 வயதேயான தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் ஒருவர், தனது மகளுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கடலூர் சமூகநலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படை கடலூர் போலீசார் நேற்று சிதம்பரத்தில் இருந்த தீட்சிதரையும் அவரது மகளையும் (சிறுமி) கடலூருக்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். விடிய விடிய செய்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் செய்து உண்மைதான் என தெரிய வந்திருக்கிறது.

image

இதையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையான சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது `குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின்’ கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.