திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஆ.ராசா அண்மையில் இந்து மதம் பற்றி பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்தநிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திமுக ஆட்சியில் தமிழரின் மாண்பையும், மரபையும், தொன்மையையும், இறை நம்பிக்கையும் இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26 ஆம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

பாஜக

காவல்துறை திமுக-வின் ஏவல்துறையாக செயல்படுகிறது. தமிழ் இனத்தை தமிழ் பெண்களை இழிவு படுத்தி கேவலப்படுத்தும் ஆ.ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள்.

திமுகவின் அராஜகமும் ஆளுங்கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும் கண்டிக்கத்தக்கது. மிக விரைவில் இந்த போலி வழக்கு கைது நடவடிக்கையும் மேலும் அதிகரிக்க கூடும் என்று நம்பப்படுகிறது. திமுக பேசினால் கண்களை மூடிக்கொண்டு அந்த அவலத்தை கண்டுகொள்ளாத காவல்துறை …. மறுப்பு தெரிவிக்கும் மக்களை எல்லாம் கைது செய்வது காவல்துறையின் ஓரவஞ்சனையான நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

ராசா

திமுகவின் பொய் வழக்கை கண்டும், கைது நடவடிக்கையை கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப் போவதில்லை. தமிழின தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்?… காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு விரைவில் இல்லை.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று மேலும் புதிய வேகத்துடன், புதிய எழுச்சியுடன் கோவை மாவட்டத்தில் தாய்க்குலத்தை பழித்த, தமிழ் சகோதரிகளை பிறப்பு சொல்லி இழிவு செய்த ஆ. ராசாவின் அவலத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை நடத்துவோம். மக்கள் ஆளும் கட்சியின் அநீதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்திருக்கிறார்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.