சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 12.09.2022 முதல் 18.09.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற பத்து லட்சத்து இருபத்து ஏழாயிரத்து நானூற்று நாற்பது ரூபாய் மதிப்புள்ள, 1818 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 52 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட 184 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.