சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் ரங்காச்சாரி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(65). இவரது மகன் டில்லிபாபு (35). இவர், பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பாஸ்கர் பிளாஸ்டிக் பேப்பர், தட்டுகள், கிளாஸ்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் டில்லிபாபுவின் பிறந்த நாள் என்பதால் பெங்களூருலிருந்து தனது நண்பரான பாலாஜி (28) என்பவருடன் வீட்டிற்கு வந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

பின்னர், அனைவரும் வீட்டில் படுத்து தூங்கினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாஸ்கர், டில்லிபாபு மற்றும் அவரது நண்பர் பாலாஜி ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்சார கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.