புதுச்சேரி : தவளக்குப்பம் ஏ.ஜே., (சி.பி.எஸ்.இ.,) மேல்நிலை பள்ளியில் விஷக்காய்ச்சலுக்கு எதிரான மருத்துவ விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

பள்ளி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். டாக்டர் லோகேஷ், புளு, டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களில் இருந்து தற்காத்து கொள்வது, காய்ச்சல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை மற்றும் நோய் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கினார். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், ஆசிரியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் வனிதா நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.