தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

“கடந்த மாதம்கூட எனது குழந்தைகளை மூலம், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம், `சென்னையில் யாசகம் எடுக்கும் குழந்தைகளை அதிகளவில் நாங்கள் பார்க்கிறோம். யாசகம் எடுக்கும் குழந்தைகள் இருக்ககூடாது. இதை தடுக்கவேண்டும்’ எனக்கோரி மனுகொடுத்தோம். இதேபோல, நான் கம்ளைண்ட் கொடுக்கும்போதெல்லாம் ஒரு நான்கு நாள்களுக்கு யாசகம் எடுப்பவர்கள் எங்கும் இருக்க மாட்டார்கள். அதற்குள் எப்படியோ தகவல்போய் அலர்ட் ஆகிவிடுகிறார்கள். அதன்பிறகு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பழையபடியே அந்தந்தந்த இடங்களில் யாசகம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

வியாபார நோக்கில் திட்டமிட்டு குழந்தைகளை யாசகம் எடுக்க வைப்பது ஒரு புறம் இருக்க, வறுமை காரணமாக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை யாசகம் எடுக்க அனுப்புவதும் இருக்கத்தான் செய்கிறது. இதுபற்றி தொடர்ந்து குழந்தைகள் நலக் குழுவின் (Child Welfare Committee- CWC) உதவி எண் 1098-க்கு அழைத்து தகவல் தெரிவித்தாலும், அவர்கள் சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை எச்சரித்து மட்டுமே அனுப்புகின்றனர். ஆனால், அப்படி செய்யக்கூடாது. பெற்றோர்களால் வளர்க்கமுடியாதக் குழந்தைகளை அரசாங்கமே ஏற்று, அரசு சார்பில் இயங்கும் இல்லங்களில் சேர்த்து, உணவு உடை இருப்பிடம், கல்வி என அனைத்து வசதிகளையும் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும். இல்லையென்றால், அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் விற்பதுக்கும், பாலியல் தொழிலில் தள்ளக்கூடிய நிலைக்கும் பெற்றோர்கள் செல்வார்கள். சென்றிருக்கிறார்கள்.

இந்த விவகாரங்களில் அரசாங்கம் அலட்சியமாக இருக்கக்கூடாது. இந்தக் குற்றங்களில் ஈடுபடும் மாஃபியா நெட்வொர்க்கை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுத்து, கடுமையான தண்டனைகள் வழங்கவேணும். மேலும், பொதுமக்களும் யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பதுக்குப் பதிலாக உணவு வாங்கி கொடுக்கும் முறைக்கு மாறவேண்டும். ஏதாவது ஒரு புள்ளியிலாவது இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.” என்கிறார் கன்யா பாபு.

அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.