புதுச்சேரி : சனீஸ்வர பகவான் கோவில் வித்யா மகா மண்டபத்தில் ப்ரஹ்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 28வது ஆராதனை விழா நாளை நடக்கிறது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில், லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட் சார்பில் ப்ரஹ்மஸ்ரீ கிருஷணமூர்த்தி சாஸ்த்ரிகள் 28வது ஆண்டு ஆராதனை விழாநாளை (22ம் தேதி)நடக்கிறது.அதனையொட்டி நாளை காலை 9:00 மணிக்கு வச்சலா சிதம்பரகுருக்கள் தலைமையில் ஜோதிட பூஷணம் சிவஸ்ரீ கீதாசங்கர குருக்களின் ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு கீதாராம சாஸ்திரிகள் தலைமையில் சங்கர் எம்.எல்.ஏ., டிரஸ்ட் தலைவர் சீனுவாசன், கல்யாணம், வேதராமன், சுவாமிநாதன், முரளிராஜகோபால், ஆனந்த பத்மநாபன், சீத்தாராமன், ரகோத்மன், ரவி உள்ளிட்டோர் பங்கேற்கும், ப்ரஹ்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் சிலைக்கு மலர் அஞ்சலி புஷ்ப வழிபாடு நடக்கிறது.காலை 11:30 மணிக்கு ஸாம வேத பாராயணம், 12:00 மணிக்கு குரு ஆராதனை, 1:30 மணிக்கு பந்துமித்ர போஜனம் நடக்கிறது.ஏற்பாடுகளை கீதாராம குருக்கள், சிஷ்யர்கள், பந்துக்கள் செய்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.