புதுச்சேரியில் மாமியார் மருமகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்ப்பிணி இறந்ததை பார்த்த கணவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இத்தகவல் அறிந்த அப்பெண்னின் மாமியாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). இவர் ஓட்டுநராகவும், பெயிண்டராகவும் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனந்த், மனைவி சந்தியா மற்றும் ஆனந்த்தின் அம்மா ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்படி இருக்கையில் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனந்த் பலமுறை தனது மனைவிக்கும் அம்மாவுக்கும் இடையேயான தகராற்றை தடுத்து, மேற்கொண்டு சண்டை ஏதும் வராமல் சமாதானம் செய்து வந்திருக்கிறார்.

image

இந்த நிலையில் இன்று திடீரென சந்தியா வீட்டில் இருந்து அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். தூங்கி எழுந்தபின் மனைவியை தேடிப்பார்த்த ஆனந்த், மனைவி தூக்கில் தொங்குவதை அறிந்து பதட்டம் அடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மனைவி இறந்து போனதை அறிந்து துக்கம் தாங்க முடியாமல், அதே அறையில் சேலை கொண்டு ஆனந்த் தற்கொலைக்கு செய்து கொள்ள முயன்று உள்ளார்.

இதனை அறிந்த ஆனந்த்தின் அம்மா அன்னக்கிளி மற்றும் உறவினர்கள் ஆனந்துவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின் ஆனந்தின் அம்மா அன்னக்கிளியும் சேலையை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் மரணித்துவிட்டார்.

image

மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அன்னக்கிளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். ஒரே குடும்பத்தில் இருவர் இறந்து போனது அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

image

தகவல் அறிந்து திருபுவனை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி தற்கொலை செய்து கொண்ட மாமியார், மருமகளின் உடலை கைப்பற்றி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். ஒரே வீட்டில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டதும் இருவர் இறந்து போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.