கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 27 வயதான விகாஸ் ராஜன். உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியுள்ளார். பின்னர் வேலைக்காக பெங்களூரு சென்ற அவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டே, வெளிநாட்டிற்கு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஆர்கிடெக்ட் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதல் உறவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் லிவ் இன் உறவில் இரண்டு ஆண்டுகளாக இருந்த நிலையில்,இரு வீட்டாருக்கும் இவர்கள் காதல் தெரிவிக்கப்பட்டு திருமணத்திற்கும் சம்மதம் பெற்றுள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 10 தேதி பெண்ணின் நண்பர் வீட்டில் படுகாயங்களுடன் விகாஸ் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து பெண் மற்றும் நண்பர்களிடம் காவல்துறை விசாரணை நடத்திய போது தான் உண்மை வெளியாகியுள்ளது.

மருத்துவர் விகாஸ் தனது காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் போலி ஐடி ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை சில நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி விகாசின் காதலி இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண படங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். காதலி ஆத்திரமடைந்து விகாஸ்சிடம் கேட்டதற்கு ஜாலியாக தான் இதை செய்தேன் நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். ஆத்திரத்தில் சண்டை போட்டதுடன் விகாஸை பழிவாங்க வேண்டும் என  திட்டமிட்ட காதலி தனது ஆண் நண்பர்களான சுஷில், கவுதம் மற்றும் சூர்யா ஆகியோரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ

பெண்ணும், 3 ஆண் நணபர்களும் செப்டம்பர் 10ஆம் தேதி சுஷிலின் வீட்டில் குழுமியுள்ளனர். அந்த பெண் மருத்துவர் விகாஸை சுஷிலின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பெண்ணுடன் சேர்ந்த ஆண் நண்பர்கள் விகாஸை  தாக்கி சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விகாஸ்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணும் இரு ஆண் நண்பர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான ஒரு நபரை காவல்துறை தேடி வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.