தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டனில், போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, ஆறாவது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் ஜெர்லின் அனிகா இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

image

ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதிச் சுற்றில் ஜெர்லின் அனிகா தங்கப்பதக்கம் வென்றார். மேலும், இளையோர் மகளிர் பிரிவு, இளையோர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதிச்சுற்றுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

image

இந்நிலையில் மொத்தமாய் பேட்மிண்டன் தொடரின் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்ற மாணவி ஜெர்லின் அனிகா, அனைத்து பிரிவு போட்டிகளிலும் தங்கம் வென்று 6 தங்கபதக்கங்களை வாரி கொண்டுவந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.