சென்னையை அடுத்த தாம்பரம் RTO அலுவலகத்தில் 37 ஆர்.சி. புத்தகங்கள் காணாமல்போன விவகாரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு தாம்பரம் கிஷ்கிந்தா சாலையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன உரிமையாளர்களுக்கான 37 ஆர்.சி. புத்தகங்கள் காணாமல்போனது. இது தொடர்பாக கண்காணிப்பாளர்கள் பாலாஜி, லட்சுமி காந்த், காளத்தி, ஆர்.டி.ஓ. உதவியாளர் உள்பட 5 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்மார்ட் கார்டு ஆர்.சி.புத்தகம் தொலைந்து போன 37 பேருக்கும் ஏற்கெனவே புதிதாக வழங்கப்பட்ட நிலையில், கவனக்குறைவாக செயல்பட்டதாக தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.