Loading

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ‛பிஎம் கேர்ஸ்’ அறக்கட்டளை தலைவராக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில், கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, ‘பிஎம் கேர்ஸ்’ என்ற புதிய நிதியத்தை, பிரதமர், நரேந்திர மோடி, 2020ம் ஆண்வு மார்ச் 27ல் அறிவித்தார். இந்த நிதியத்திற்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் நன்கொடைகள் அளித்தன. இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரமதர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பிஎம் கேர்ஸ் மூலம் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள், மருத்துவக் கருவிகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (செப்.,20) நடந்தது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா, தொழிலதிபர் டாடா சன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் ‛பிஎம் கேர்ஸ்’ அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ரத்தன் டாடா ‛பிஎம் கேர்ஸ்’ அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

latest tamil news

தவிர, ‛பிஎம் கேர்ஸ்’ நிதியம் ஆலோசனைக் குழுவுக்கு உறுப்பினர்களாக முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ராஜிவ் மெஹ்ரிஷி, இன்போசிஸ் நிறுவனத்தின் சுதா மூர்த்தி, பிராமல் நிறுவனம், மற்றும் இந்தியா கார்ப்ஸ் முன்னாள் சிஇஓ ஆனந்த் ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *