துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் ரம்யா

9/13/2022 2:17:09 AM

சென்னை: துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.ஜோக்கர், ஆண் தேவதை, ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், முகிலன் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இப்போது மம்மூட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென துப்பாக்கி சுடும் பயிற்சியை ரம்யா பாண்டியன் மேற்கொண்டுள்ளார். இது நீண்ட நாள் ஆசை என்றும் பயிற்சியாளர் ராஜசேகர பாண்டியனிடம் கடந்த சில மாதமாக பயிற்சி பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது: கடந்த வார இறுதியில் நான் திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டேன். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் ராஜசேகர பாண்டியன் அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. இப்போது நான் RPSCன் கவுரவ உறுப்பினர் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. திருச்சியை அடுத்து சென்னையிலும் எனது துப்பாக்கிச்சூடு பயிற்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.