காங்கிரஸ் கட்சியினர், “இந்தியாவின் ஊழல் தலைநகரம் பாஜக ஆளும் `கர்நாடாக’ தான்” என விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் கார்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “பசவராஜ் பொம்மை அரசு டெண்டர்களில் 40% கமிஷன் வசூலிக்கிறது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
ட்விட்டர்

இந்த நிலையில், டி.கே.சிவக்குமாரின் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து முதல்வர் பசவராஜ் பொம்மையை விமர்சிக்கும் விதமாக, `PayCM’ என அவர் படத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

PayCM போஸ்டர்

PayCM போஸ்டர்
twitter

பெங்களூருவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில், “ `PayCM’ 40% accepted here” எனக் குறிப்பிட்டு பெரிய அளவு QR குறியீடு நடுவே பசவராஜ் பொம்மை படம் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், “இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து முதல்வரின் ஊழலுக்கு பணம் அனுப்பவும்” என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் இதனை வீடியோ எடுத்து ட்விட்டரிலும் பதிவிட்டிருக்கின்றனர்.

பின்னர் இந்த விவகாரம் அதிகாரிகளுக்குத் தெரியவரவே, பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இது பெரும் பேசுபொருளானபோதிலும், இதுவரை ஆளும் பா.ஜ.க தரப்பிலிருந்து இதற்கு எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.