ஒரு நேர்காணலில், ‘தங்கள் குரு யார்’ என மாதா அமிர்தானந்தமயியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமிர்தானந்தமயி, “இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அதனால் பிரபஞ்சம் முழுவதும் அம்மாவுக்கு குருதான். ஆனால், ஒரு நபர் எனத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் என் அம்மா தமயந்தி அம்மாதான் எனக்கு குரு” எனக் கூறியிருந்தார்.

தாய் தமயந்தி அம்மாவுடன் மாதா அமிர்தானந்தமயி

தாய் தமயந்தி அம்மாவுடன் மாதா அமிர்தானந்தமயி

வேதாந்தமோ, ஆன்மிகமோ படித்து அறியாமல் இருந்தாலும் தமயந்தி அம்மா போன்றவர்களின் ஒவ்வொரு செயலிலும் அதைக் காணலாம் என்றும் அமிர்தானந்தமயி கூறுவதுண்டு. மாதா அமிர்தானந்தமயியாகத் தனது மகள் உலகம் முழுவதும் அறியப்பட்ட பிறகும் வெளி உலகில் அறியப்படாதவராக இருந்தார் தமயந்தி அம்மா. அனைத்து பக்தர்களையும்போல மாதா அமிர்தானந்தமயியை ‘அம்மா’ என்றே அழைத்துவந்தார் தமயந்தி அம்மா.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.