வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சர்கள் அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக எழுந்த குற்றச்சாட்டை விமர்சித்து, ‛இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும்’ என்ற வாசகத்துடன் முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் உள்ளது. அங்கு, அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பா.ஜ., அமைச்சர்கள், 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பசவராஜ் பொம்மை ஆட்சியில் 40 சதவீத கமிஷன் பெறப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

latest tamil news

இந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியினர், ‛இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும்’ என்ற வாசகத்துடன் முதல்வருக்கு பணம் செலுத்துவதை குறிக்கும் வகையில் ‛பே சி.எம்’ எனக் குறிப்பிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய ‛க்யூ.ஆர் கோட்’ போஸ்டரை ஒட்டியுள்ளனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.